Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்ஸின் சாணக்கியத்தனம்: அடிக்கு மேல் அடி வாங்கும் சசி அணி!

ஓபிஎஸ்ஸின் சாணக்கியத்தனம்: அடிக்கு மேல் அடி வாங்கும் சசி அணி!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (12:49 IST)
இரண்டாக பிளவுபட்டுள்ள அதிமுகவில் ஓபிஎஸ் அணி முன்னேற்றத்தையும், சசிகலா அணி தொடர் பின்னடைவையும் சந்தித்து வருகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும், இரட்டை மின்கம்பம் சின்னத்தை ஓபிஎஸ் அணி போராடி பெற்றது அந்த அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.


 
 
இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்குத்தான் கிடைக்கும் அவர்களுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது, உத்தரப்பிரதேசத்தில் இதே முறை தான் கையாளப்பட்டது. அதன்படி சசிகலா தரப்பு இரட்டை இலை சின்னத்தை பெறும் என கூறப்பட்டது.
 
ஆனால் ஓபிஎஸ் அணியின் வலுவான வாதத்தால் இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கு கிடைக்கவில்லை. கடைசியில் அது தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று புதிய சின்னத்தை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் ஆணையத்துக்கு சென்றது.
 
இதில் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் போன்ற தோற்றமுடைய இரட்டை மின்கம்பம் ஒதுக்கப்பட்டது. இது ஓபிஎஸ்ஸின் அரசியல் சாணக்கியத்தனம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 
சசிகலா அணியினர் முதலில் ஆட்டோ சின்னத்தை பெற்று பின்னர் தொப்பி சின்னத்துக்கு மாறினர். ஆனால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும் பழக்கமுடையோர் இரட்டை இலை சின்னத்தை போலவே உள்ள இரட்டை மின்கம்பத்துக்கு வாக்களிக்கலாம் என்பது சசிகலா அணிக்கு பின்னர் தான் புரிந்திருக்கிறது.
 
ஆனால் ஓபிஎஸ் அணியினர் முதலில் மின்கம்பம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரியதால் அது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இது ஓபிஎஸ் அணிக்கு கிடைத்த வெற்றியாகவும், சசிகலா அணிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments