ஓபிஎஸ் அணிக்கு புதிய பெயர்.. அதிலும் அதிமுக பெயர் இருக்குதே..!

Siva
திங்கள், 4 மார்ச் 2024 (07:57 IST)
சமீபத்தில் அதிமுகவிலிருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில் அவர் அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் தனது அணிக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பெயரிலும் அதிமுக இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் பல சட்ட போராட்டம் நடத்தியும் அவருக்கு அதிமுகவில் எந்தவித உரிமையும் கிடையாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து அதிமுகவின் தனி அணியாக அவர் செயல்பட்டு வந்த நிலையில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை வாங்குவேன் என்று சமீபத்தில் கூட பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது அணிக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்று பெயர் வைத்துள்ளதாகவும் இந்த பெயரில் அவர் லெட்டர்ஹெட் வடிவமைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் சில நிர்வாகிகளையும் அவர் நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் கருப்பு வெள்ளை கலரில் இந்த லெட்டர்ஹெட் இடம் பெற்றுள்ளதை  அடுத்து அதிமுக என்ற பெயரும் இந்த அணியில் இருப்பதை அடுத்து அதிமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவுடன் பேச்சுவார்த்தை?.. காய் நகர்த்தும் சசிகலா!.. விஜய் சம்மதிப்பாரா?...

விஜய்யை நம்பி நாட்டை ஒப்படைத்தால் குத்தாட்டம் தான் போடுவார்.. திட்டங்கள் எதுவும் நடக்காது.. திண்டுக்கல் லியோனி

அஜித்குமார் கொலை வழக்கு!.. போலீஸுக்கு பாடம் புகட்டுவோம்!.. உயர்நீதிமன்றம் காட்டம்!...

விஜய்க்கு எந்த கட்சி யாருடன் கூட்டணியில் உள்ளது என்று கூட தெரியாது: ஈபிஎஸ் கலாய்ப்பு..!

3 சிலிண்டர்கள் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. தொழில் தொடங்க வட்டியில்லா கடன்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments