Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்..!

Siva
வெள்ளி, 1 மார்ச் 2024 (07:06 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபி ரவீந்திரநாத் இம்முறை அந்த தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு தேனி உட்பட எந்த தென் மாவட்ட தொகுதியிலும் போட்டியிட தயார் என்று கூறினார்.
 
மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணி இணைவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைவது உறுதி என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாக சொல்வது வதந்தி என்றும் சின்னம் குறித்து இனிமேல் தான் நாங்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றும் பாஜக கூட்டணியில் பங்கேற்று அவரை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்றும் தேனி உட்பட எந்த ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சிகள் முடிவு செய்தாலும் அதை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments