Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஓட்டுக்கள் எங்களுக்கு தான் கிடைக்கும்..! ரேஸில் இணைந்த திமுக..!!

Senthil Velan
செவ்வாய், 2 ஜூலை 2024 (14:55 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக, நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து அதிமுக ஓட்டுகள் எங்களுக்கு தான் கிடைக்கும் என்று திமுக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற பத்தாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.
 
இந்த தேர்தலை அதிமுக,  தேமுதிக புறக்கணித்து உள்ள நிலையில், அந்தக் கட்சிகளின் வாக்குகளை பெற பாமக, நாம் தமிழர் இடையே போட்டி  நிலவுகிறது. இரு கட்சிகளும் அவர்களின் ஆதரவை கோரி உள்ளனர்.
 
இந்நிலையில் எம்ஜிஆர் ஒரு காலத்தில் திமுகவில் தான் இருந்தார் என்றும் எனவே அதிமுகவின் ஓட்டு எங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

ALSO READ: ராகுல் காந்தியை போல் செயல்படாதீர்கள்..! NDA எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..!!
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அப்படி என்றால் எல்லோரும் வந்து அதிமுகவில் சேர்ந்து விட வேண்டியதுதானே என்றும் விமர்சித்துள்ளார். அவருக்கு அடையாளம் கொடுத்தே அதிமுக தான்' எனத் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments