Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியா? அதிர்ச்சியில் வைகோ

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (11:01 IST)
திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறுமா? என்ற சந்தேகம் கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்தது. ஆனால் எதிர்த்தரப்பான அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இணைந்துவிட்டது, தேமுதிகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் வேறு வழியில்லாமல் திமுகவும் மதிமுக, விசிகவை கூட்டணியில் இணைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் குறைவான தொகுதிகளையே திமுக தரும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக மதிமுகவுக்கு ஒருவிரல் புரட்சிதானாம். ஒரு தொகுதிதான் என்பதை கேட்டவுடனே வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அனேகமாக அவர் கூட்டணியில் இருந்து வெளியேற அல்லது வழக்கம்போல் தேர்தலை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதேபோல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் 10, விசிக 2, தேமுதிக வந்தால் 7, முஸ்லீம் 1. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2, என பிரித்து கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேமுதிக கூட்டணியில் இணைந்தால் திமுக 20க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் - எதற்காக?

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ: கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரியங்கா காந்தி பதவியேற்றதும் மீண்டும் அமளி.. இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments