சீசன் வந்தாச்சு!! கெத்தை விட்டு பிழைப்பை பார்க்க கிளம்பிய ஆம்னி !

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (08:13 IST)
நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
 
அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 7 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சில கோரிக்கைகளை வைத்து இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆம்னி பேருந்து சேவை துவங்கப்படும் என கூறப்பட்டது. 
 
ஆனால் அரசு இதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இதனோடு தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் வேறு வழி இல்லாமல் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய - மாநில அரசின் விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments