Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பமாகி கருவையும் கலைத்த 14 வயது சிறுமி: காரணம் 45 வயது முதியவர்!

வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பமாகி கருவையும் கலைத்த 14 வயது சிறுமி: காரணம் 45 வயது முதியவர்!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (14:41 IST)
சென்னையில் 14 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பமாகி பின்னர் வீட்டுக்கு தெரியாமல் அந்த கருவையும் கலைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காரணம் 45 வயது முதியவர் தான் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.


 
 
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள 45 வயதான மாரி என்ற நபர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளார்.
 
அதன் பின்னர் தனது வீட்டில் வைத்து சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார் அவர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக அதனை வீட்டிற்கு தெரியாமல் கலைத்துள்ளார்.
 
கரு கலைப்பு செய்த பின்னரும் சிறுமிக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி ஏற்கனவே கர்ப்பம் தரித்து பின்னர் கருவை கலைத்த சம்பவம் மருத்துவர்களுக்கு தெரியவந்தது.
 
அதன் பின்னர் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமி நடந்த சம்பவம் அனைத்தையும் பெற்றோரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் 45 வயதான மாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்