Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

Senthil Velan
திங்கள், 23 செப்டம்பர் 2024 (16:33 IST)
தேனியில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரை கடத்தி, 4-பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி முடிந்து அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 
 
பின்னர் மாணவியை அங்கிருந்து அழைத்துச் சென்று, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த இருப்புப் பாதை காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட  பெண் கூறியுள்ளார். அவரிடம் நான்கு இளைஞர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து காவலர்கள் அந்த பெண்ணை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த தேனி நகர காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று, அந்தப் பெண் மற்றும் அவரது தாயாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அந்த நான்கு பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


ALSO READ: எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...
 
கொல்கத்தாவில் பயிற்சிப் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்