Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு

கே.என்.வடிவேல்
செவ்வாய், 1 மார்ச் 2016 (03:21 IST)
வரும் சட்ட மன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு  மெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 
 
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது.

இந்த நிலையில் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும்  அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.

இந்த, நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரகேசர் சார்பில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும்  அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்த போது, இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிதந்துள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஒரே நேரத்தில் வெடித்த ஏராளமான பேஜர் கருவிகள்.. 2750 பேர் காயம்.. 8 பேர் பலி..!

இன்று காலை 10 மணிக்குள் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! பெரும் பரபரப்பு..!

Show comments