Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதயாத்திரை அல்ல; கொடூரங்களுக்கு பரிகாரம் தேடும் பாவ யாத்திரை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (20:15 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள் ‘’ பாத யாத்திரை தொடக்க விழா  நேற்று ராமேஸ்வரத்தில்  நடந்தது.

இந்த யாத்திரையின் தொடக்க விழாவிற்கு என்டிஏ கூட்டணியில் முக்கிய  தலைவர்கள் விருந்தினர்களாக அழைப்பட்ட நிலையில்,  மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாமலையில் யாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

அண்ணாமலையில் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் நிலையில், யாத்திரையின் முத நாளான இன்று, அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜக  தொண்டர்களை சந்தித்து வருகின்றனர்.

அதேசமயம்  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  மீனவ சமுதாய மக்களைச் சந்தித்து,  பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், மீனவர்களுக்காகக் கொண்டு வந்துள்ள நலத் திட்டங்கள் குறித்தும், மீனவ சகோதர சகோதரிகளுடன் அரசு சார்ந்த தேவைகள் குறித்தும் உரையாடிவருகின்றனர்.

இந்த நிலையில்,  அண்ணாமலையின் பாத யாத்திரை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  உங்கள் ஆட்டம் இன்னும் சில மாதங்கள் தான். பாதயாத்திரை அல்ல; கொடூரங்களுக்குப் பரிகாரம் தேடும் பாவ யாத்திரை இது. மணிப்பூரில் அமைதி யாத்திரை நடத்த முடியுமா? நமது எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறாரோ…நாமும் அந்த ஆயுதத்தை  எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments