Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஆயிரம் கருணாநிதி, ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது' - காமராஜ் அதிரடி

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (11:04 IST)
ஆயிரம் கருணாநிதி வந்தாலும் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது என்று தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கூறியுள்ளார்.


 

எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ”அதிமுக என்பது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு தொண்டர்களால் நிறைந்திருக்கும் இயக்கம். மக்களுக்காக எம்ஜிஆர்,, ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்ட இயக்கம்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை உடைத்து விடலாம் என கனவு காண்கின்றனர். அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும். அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு சசிகலாவின் வலுவான தலைமை கிடைத்துவிட்டது.

இதனால் தி.மு.க.வினர் பொறாமையில் உள்ளனர். ஆயிரம் கருணாநிதி வந்தாலும் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments