Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.! ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி.!!

Senthil Velan
செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:03 IST)
திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திருவள்ளூர் தினத்தை ஒட்டி நெற்றியில் விபூதியுடன் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு தமிழக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் வாழ்த்து  தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
முதல்வரின் எக்ஸ் பதிவில்:
 
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
ALSO READ: கடுமையான பனிமூட்டம்.! ஊர்ந்து சென்ற வாகனங்கள்..!
 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
 
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments