Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை: வேளாண் அமைச்சர்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (12:41 IST)
விவசாயிகள் தங்கள் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் பேசினார். அப்போது நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கான அறிவிப்பு வெளியாகிறது என்றும் விவசாயிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் ஆழ்துளைக்கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் படி நிலத்தடி நீரை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறையை புதுச்சேரியில் செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
விவசாயிகள் ஒரு ஆள்துறை கிணறுக்கும் மற்றொரு ஆழ்துளை கிணறுக்கும் இடையே இடைவெளி தேவை இல்லை என்றும் அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் ஆழ்துளைக்கிணறு அமைத்தவுடன் கட்டணம் இல்லாமல் அரசிடம் பதிவு செய்து அதற்கான சான்றிதழை பெற்று வைத்து மின் இணைப்பையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments