Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் இன்றி 10 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமம்.. பொதுமக்கள் குமுறல்..!

Siva
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:31 IST)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மின்சாரம் இன்றி 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள தட்டான்குளம் கிராமம் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து, மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே குழப்பம் இருப்பதால் தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது.
 
10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். மேலும் மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள் தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் மின்சார பராமரிப்பு பணிகள் அனைத்தும் சரியாகிவிடும் என்றும் அனைத்து பணிகளும் விரைவில் நடைபெறும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments