Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த தேர்தலிலும் போட்டியில்லை.. யாருக்கும் ஆதரவு இல்லை! – த.வே.க புஸ்ஸி ஆனந்த் அறிக்கை!

Prasanth Karthick
செவ்வாய், 18 ஜூன் 2024 (10:50 IST)
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைபாடு என்ன என்பது குறித்து கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக வெற்றிக்‌ கழகத்‌ தலைவர்‌, தளபதி விஜய்‌ அவர்கள்‌, கடந்த பிப்ரவரி மாதம்‌ 2ஆம்‌ தேதி வெளியிட்ட கட்சித்‌ தொடக்க அறிவிப்பிற்கான முதல்‌ அறிக்கையிலேயே, எங்கள்‌ கழகத்தின்‌ அரசியல்‌ நிலைப்பாடு குறித்துத்‌ தெளிவாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

கழகத்‌ தலைவர்‌ அவர்கள்‌, விரைவில்‌ கழகத்தின்‌ கொள்கைகள்‌, கோட்பாடுகள்‌ மற்றும்‌ செயல்திட்டங்களைத்‌ தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ முதல்‌ மாநில மாநாட்டில்‌ வெளியிட்டு, அதன்‌ தொடர்ச்சியாகக்‌ கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள்‌, தமிழகம்‌ முழுவதும்‌ மக்கள்‌ சந்திப்புப்‌ பயணங்கள்‌ என்று, வரும்‌ 2026ஆம்‌ ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலுக்கான ஆயத்தப்‌ பணிகளை மேற்கொண்டு, தேர்தலில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள்‌ பணியாற்றுவது தான்‌ நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்‌. எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில்‌ நடத்தப்படும்‌ உள்ளாட்சித்‌ தேர்தல்‌ உள்பட எந்தத்‌ தேர்தலிலும்‌ தமிழக வற்றிக்‌ கழகம்‌ போட்டியிடாது என்பதைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம்‌ தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத்‌ தொகுதி இடைத்தேர்தலில்‌, தமிழக வெற்றிக்‌ கழகம்‌ போட்டியிடாது என்றும்‌, எந்தக்‌ கட்சிக்கும்‌ ஆதரவு இல்லை என்றும்‌, தமிழக வெற்றிக்‌ கழகத்‌ தலைவர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்‌ பேரில்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments