Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் நகரும் வேகம் 11 கி.மீ. ஆக அதிகரிப்பு !

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:28 IST)
தற்போது நிவர் புயலின் வேகம் 11 கிமீ ஆக உயர்ந்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது.  
 
அதாவது, நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் போது மணிக்கு 130 - 140 கிமி வேகத்தில் காற்று வீசும், மேலும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிமி வரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி இன்று காலை 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது நிவர் புயலின் வேகம் 11 கிமீ ஆக உயர்ந்துள்ளதாம். கடலூரில் இருந்து 240 கிமீ, புதுச்சேரில் இருந்து 250 கிமீ, சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோவில்: புத்தாண்டு தினத்தில் 2 லட்சம் பக்தர்கள் வருகை..

பா.ம.க. மகளிர் அணி போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.. தடையை மீறி நடக்குமா?

விடுமுறை நீட்டிப்பு இல்லை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல்..!

புர்கா அணிய தடை: சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதியில்லையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments