Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாராச பேச்சு, ஆபாச அர்ச்சனை: நித்தியை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (12:19 IST)
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து மேற்கோள் காட்டிய விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. தொடர்ந்து பலரும் எதிர்விணையாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.
 
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வைரமுத்துவை ஆபாசமாக அர்ச்சனை செய்து ஆரம்பித்து வைத்தது, தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து வரும் வீடியோக்கள் மிகவும் மோசமாக முகம் சுளிக்கும் அளவுக்கு நாராச உரையாடல் மிகுந்ததாக உள்ளது.
 
இந்நிலையில் பொதுவெளியி இப்படி ஆபாசமாக பேசி வீடியோவை வெளியிடும் நித்தியானந்தாவை கைது செய்ய பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் நித்தியானந்தாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அதில், இந்த விஷயத்தில் இந்து தர்மம் என்ற பெயரில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்களில் பெரும்பாலான இந்துக்களை முகம் சுளிக்கச் செய்யும் வகையில் கருத்துகளை வெளியிடுவதை கண்டிக்கின்றோம். இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் நாராச உரையாடல்களைப் பரப்பிவரும் நித்தியானந்தாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments