Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`92-க்கும், 42-க்கும் வித்தியாசம் தெரியாதா முதல்வருக்கு? நிர்மலா சீதாராமன் கேள்வி..!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (16:51 IST)
மழைநீர் வடிகால் பணியை 92 சதவீதம் முடித்துவிட்டோம் என்று சொல்லிவிட்டு வெள்ளம் வந்த பிறகு 42% தான் முடித்துள்ளோம் என்று கூறுகிறார்கள். 92 க்கும் 42க்கும் முதல்வருக்கு வித்தியாசம் தெரியாதா? இன்னொரு அமைச்சரை வைத்து வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்கவில்லை என்று முதல்வர் கூறுகிறார் என சரமாரியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். 
 
சென்னையில் 4000 கோடியில் 92 சதவீதம் செலவு செய்து மழைநீர் வடிகால் பணியை முடித்து விட்டோம் என்று கூறினார்களே? அந்த பணத்தை என்ன செய்தார்கள்? 2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பிறகும் என்ன கற்றுக் கொண்டீர்கள்?  என்ற கேள்வி எழுப்பினார். 
 
மேலும் தேசிய பேரிடர் என்று எதுவும் இல்லை என்றும் மத்திய அரசியல் எதையும் தேசிய பேரிடர் என்று அறிவித்தது இல்லை என்றும் அந்த சிஸ்டமே தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  
 
உங்கள் அப்பா வீட்டு பணமா என்று கேட்பவர் அப்பா வீட்டின் மூலம் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று கேட்க முடியுமா?  அமைச்சர் பதவிக்கு ஏற்றவாறு வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்று தெரிவித்தார். 
 
மேலும் நிவாரண நிதியை மக்களுக்கு ஏன் ரொக்கமாக கொடுக்கிறார்கள்? அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்கும்போது வங்கியில் அனுப்ப வேண்டிய தானே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments