ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிர்மலாதேவி: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (09:31 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு நேற்று நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. எனவே சிறை நடைமுறைகள் முடிந்து இன்று அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சிக்கல் நிர்மலாவுக்கு ஏற்பட்டுள்ளது. நிர்மலாவுக்கு ஜாமீன்தாரார்களாக பொறுப்பேற்று அவரை அழைத்து செல்ல அவருடைய குடும்பத்தினர் உள்பட யாரும் முன்வராததால் நிர்மலா வெளியே வரமுடியவில்லை. இதனால் நிர்மலாதேவி திகைப்பில் இருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
நிர்மலாதேவி சிறைக்கு சென்ற இத்தனை மாதங்களில் அவருடைய பெற்றோர் உள்பட யாரும் அவரை சிறைக்கு சென்று பார்க்கவில்லை என்பதும், அவருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யக்கூட அவருடைய உறவினர்கள் முன்வரவில்லை என்பதும் நிர்மலாதேவியின் வழக்கறிஞர்தான் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments