Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம் - கருணாநிதி எச்சரிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம் - கருணாநிதி எச்சரிக்கை

Webdunia
திங்கள், 21 மார்ச் 2016 (00:42 IST)
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம் மாற்றம் செய்யப்பட்டால், பல்வேறு பிரச்சனைகள் வெடிக்கும் என கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி-பதில் பாணியில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை, "என்.எல்.சி. இந்தியா லிமிடெட்" என்று மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பது பற்றி? என்ற கேள்விக்கு, "நெய்வேலி" என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் அழகான தமிழ்ப் பெயரை மாற்றுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 
 
இந்தப் பெயரை மாற்றுவதற்கு, அங்கே பணி யாற்றும் தொழிலாளர்களின் ஒப்புதல் நிச்சயமாகக் கிடைக்காது என்றே நான் நம்புகிறேன். 
 
மத்திய பாஜக அரசின் தேவையில்லாத வேலைகளில் இதுவும் ஒன்று. நிறைவேற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் எவ்வளவோ இருக்க, வீண் வம்பினை விலைக்கு வாங்குகின்ற வேலையாகத்தான் இதுவும் இருக்க முடியும்.
 
கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயரை, "டால்மியாபுரம்" என்று பெயர் மாற்ற முயற்சித்ததைப் போன்ற பிரச்சினைதான் இதுவும். எனவே மத்திய அரசு, குறிப்பாக பிரதமர், தேவையில்லாத இந்த முயற்சியில் ஈடுபட வேண்டாம் என திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

Show comments