Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூஸ் 7 செய்தியாளர் பாலமுருகன் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (00:17 IST)
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாலமுருகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை நகராட்சி பஸ் நிலைய கழிவறை பிரச்சினை குறித்து, செய்தி சேகரித்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாலமுருகன் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
 
தேவக்கோட்டை நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், நகர திமுக நிர்வாகியுமான பாலா என்பவர் கழிவறையை ஏலத்தில் எடுத்த வகையில் நகராட்சிக்கு பெருமளவில் பாக்கி செலுத்த வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பான நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பாலமுருகன் படம் பிடித்ததால் அவர் மீது திமுக நிர்வாகி பாலா அவரது ஆதரவாளர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த பத்திரிகையாளர் பாலமுருகனை அப்பகுதி மக்கள் மீட்டு  தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் ஊடகத் துறையினர் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  
 

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் - அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்...

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு..!!

Show comments