Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் சிசிடிவி.. ஓட்டுனர், நடத்துனர்களுக்கு புதிய நெறிமுறைகள்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (12:36 IST)
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சிசிடிவி. அலாரம் பொருத்தப்பட்ட பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள், நடத்துனருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பின் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராவும், அலாரமும் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேருந்து ஓட்டுனர், நடத்துனருக்கு வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் 3 சிசிடிவி கேமராக்கள், 4 அலார பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளில் மற்ற பயணிகளால் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அலார மணியை அழுத்த வேண்டும்.

அவசரகால ஒலி ஏற்படும்போது நிலைமையை கண்காணித்து நடத்துனர் போலீஸுக்கு புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தலைமையக தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments