Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டுக்குள் புதிய ரயில் நிலையம்; கலகலக்கும் கிளாம்பாக்கம்!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:10 IST)
கிளாம்பாக்கத்தில் ஒரு ஆண்டுக்குள் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் பெரும் செலவில் புதிய பேருந்து முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பேருந்து முனையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

புதிய பேருந்து முனையத்தை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையமும் அமைய உள்ளது. கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடை கொண்ட ரயில் நிலையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு ரூ.20 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரயில்வே நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ வழங்க உள்ளது.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை பேருந்து முனையம் செல்லும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் உதவியாக அமையும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது விஜய்க்கான ஒய் பிரிவு பாதுகாப்பு.. 11 பேர் பாதுகாப்பு..!

திமுக நடத்தி வந்த நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது: வானதி சீனிவாசன்

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments