அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு மழை குறையும்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (13:17 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றால் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த சூழலால் மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் பின்னர் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாக்குமரி, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments