Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!

Siva
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:35 IST)
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோயில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், போலீசில் அளித்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பெண் வழக்கறிஞரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நரசிம்மன் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், நாளை அவர் ஜாமீனில் விடுபட்டாலும், வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments