Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த சில மணிநேரக் குழந்தையை குளத்தில் வீசிய கொடூரர்கள்… கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:28 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மடாப்பள்ளி எனும் கோயில் குளத்தில் பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே மாடாகுடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில்  ஒரு குழந்தையின் சடலம் மிதந்துள்ளது. இதைப்பார்த்த மக்கள் பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சிசுவின் உடலைக் கைப்பற்றினர். அதில் குழந்தையின் தொப்புள் கொடி கூட இன்னும் விழவில்லை என்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

மேலும் குழந்தை பிறந்த சில மணிநேரங்களுக்குள்ளாகவே குளத்தில் வீசப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது. இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments