Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெடியாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (12:36 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வேளாண் நிலங்கள், பயிர்கள் வீணாகின. இந்நிலையில் தற்போது வங்க கடலில் அந்தமான் தீவுப்பகுதிக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், அதற்கு பிறகான 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல; தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்: வைரமுத்துவின் ஆவேச பதிவு..!

6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments