Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி தமிழில் பேசியது ஏமாற்று என்றால் இதற்கு பெயர் என்ன? நெட்டிசன்கள் கேள்வி

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (08:15 IST)
பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசி திருக்குறள் ஒன்றையும் கூறினார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, 'மக்களை ஏமாற்றவே மோடி தமிழில் பேசியதாக விமர்சனம் செய்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கருணாநிதி சிலை திறப்புவிழாவிற்காக சோனியா காந்தி சென்னை வந்திருந்தபோது ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசினார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொண்டபோது ஒருசில வார்த்தைகள் பெங்காலியில் பேசினார். அரசியல் தலைவர்கள் வேறு மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்லும்போது அந்த பகுதி மக்களின் தாய்மொழியில் ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் தமிழகத்தில் பிரதமர் மோடி தமிழில் பேசியதை மு.க.,ஸ்டாலின் விமர்சனம் செய்ததாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.  ஏற்கனவே இந்து மத திருமணம் குறித்து ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது மோடி தமிழில் பேசியதையும் குறை கூறியுள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments