Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை - சென்னை வந்தே பாரத் இன்றும் ரத்து.. மற்ற ரயில்களின் நிலவரம் என்ன?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:57 IST)
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வந்தே பாரத் ரயில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இன்று நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் என்றும் மதுரை - புனலூர் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி - ஈரோடு ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும்  மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டவாளங்கள் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments