Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கும் மாணவர்களிடம் ஒரு அபூர்வ ஒற்றுமை!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (07:26 IST)
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சீட் பெற்ற விவகாரம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த போது உதித்சூர்யா என்ற மாணவன் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கி தந்தையுடன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது உதித்சூர்யாவை போலவே பல மாணவர்கள் இதேபோல ஆள்மாறாட்டம் செய்து மெடிக்கல் சீட் பெற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆள்மாறாட்டம் விவகாரத்தில் பிடிபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்திய மருத்துவ கல்லூரி கவுன்சில் இந்த கல்லூரியின் அங்கீகாரத்தை திடீரென ரத்து செய்தது. ஒரு மருத்துவக் கல்லூரியை நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இந்த கல்லுரியில் இல்லை என்பதால் இந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இதனை அடுத்து இந்த கல்லூரியில் படித்து வந்த 150 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இந்த மாணவர்கள் அனைவரும் மாற்று கல்லூரியில் சேர்க்குமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து 108 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் 42 மாணவர்கள் ஒரு சில காரணங்களால் வேறு கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது
 
 
இந்த நிலையில் தற்போது ஆள்மாறாட்ட விவகாரத்தில் பிடிபட்டு கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் இந்த 42 வேர்களில் ஒருவராக இருக்கின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கோவை மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி மற்றும் தலைமறைவாக உள்ள இர்பான் உள்பட 4 மாணவர்களும் இந்த 48 மாணவர்களில் நால்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மீதி உள்ள மாணவர்களிடம் விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments