Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக துணைத் தலைவராகிறார் நடிகர் நெப்போலியன் : தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (13:52 IST)
நடிகர் மற்றும் திமுக முன்னாள் மத்திய மந்திரியான நெப்போலியன் பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 
 
பாஜக விற்கு தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதன் விவரங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். 
 
அதில், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், மக்கள் தமிழகம் கட்சியினை பாஜாகவில் இணைத்த புரட்சி கவிதாசன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
நடிகர் நெப்போலியன் முதலில் திமுக வில் இருந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். அதன் பின் அவருக்கு மத்திய மந்திரி பதவியும் தரப்பட்டது. மேலும் அவர் அழகிரியின் ஆதராளராக இருந்தார். 
 
அந்நிலையில், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் எழுந்த போது, கட்சியின் நடவடிக்கை பிடிக்காமல் திமுகவிலிருந்து விலகி பாஜாக வில் சேர்ந்தார். இதுவரை அக்கட்சியில் அவருக்கு எந்த பதவியும் தரப்படவில்லை. தற்போது அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.
 
மேலும், மாநில பாஜக-வில் பதவி அளிக்கப்பட்ட பலரின் விவரங்களை தமிழிசை வெளியிட்டார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments