Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கட்சியை கலைத்துவிடுவதுதான் அமித்ஷாவுக்கு நல்லது: நாஞ்சில் சம்பத்

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (21:49 IST)
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெற்ற தோல்வி குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக எதிர்ப்பு அலை, ஊடகங்களின் எதிர்மறை பிரச்சாரம், ஸ்டாலினின் புயல்வேக உழைப்பு உள்பட பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் அவர்களும் தனது பாணியில் பாஜக தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
பாஜக இனி எப்போதுமே தமிழகத்துக்குள் வர முடியாது என்றும் பாஜகவை  ரத்த வெறிபிடித்த ஓநாய்களின் கூடாரமாக தமிழக மக்கள் கருதுவதாகவும் அவர்களின் அடாவடித்தனத்தை மக்கள் பார்த்து கொண்டிருந்ததால்தான் இவ்வளவு பெரிய தோல்வியை கொடுத்திருப்பதாகவும், மொத்தத்தில் பாஜக என்ற கட்சியை தமிழகத்தில் கலைத்துவிடுவதுதான் அமித்ஷாவுக்கு நல்லது என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
 
மேலும் அகில இந்திய அளவில் பாஜகவின் வெற்றி என்பது பாசிசத்தின் வெற்றி என்றும், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட தோல்வியால்தான் பாஜக வெற்றி பெற்றிருப்பதாகவும் பாஜகவின் வெற்றி குறித்து கொண்டாட எதுவும் இல்லை என்றும், இந்த தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ளும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments