Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்தும் அதிமுக!

கருணாநிதி நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்தும் அதிமுக!

Webdunia
புதன், 31 மே 2017 (09:50 IST)
பொதுவாக தமிழக அரசியலில் அதிமுகவும் திமுகவும் கீரியும், பாம்பும் மாதிரி. இரு கட்சிகளும் வாய்ப்பு கிடைத்தால் ஒருவரை ஒருவர் விமர்சிக்க தவற மாட்டார்கள். தேசிய கட்சிகளிடம் இருக்கும் அரசியல் நாகரிக்கம் தமிழக கட்சிகளிடம் இல்லை என கூட பேசப்பட்டது.


 
 
இவ்வளவு ஏன் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புன்னகைத்ததால் அவரது முதல்வர் பதவி கூட அதிமுக தலைமையால் பறிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.
 
ஆனால் இந்நிலையில் தற்போது அதிமுகவை சேர்ந்த அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திமுக தலைவர் கருணாநிதியை வாழ்த்தி பேசியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. மேலும் கருணாநிதியின் சட்டசபை வைர விழாவும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன கூட்டத்தில் பேசி வரும் நாஞ்சில் சம்பத் ஸ்ரீவில்லிப்புத்துரில் நடைபெற்ற கூட்டத்தில், வைரவிழா கொண்டாடுகிற கலைஞர் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என பேசியுள்ளார். கருணாநிதியின் வைர விழாவுக்கு அதிமுகவுக்கு அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்.. 19 பேர் பலி என தகவல்..!

வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60.. இன்று கவுண்ட் டவுன் தொடக்கம்..!

நீதிமன்றம் தலையிட்டுத்தான் விவகாரங்களைத் தீர்க்குமா? மாணவி விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜூனா..!

அடுத்த கட்டுரையில்
Show comments