Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மாதிரி புத்திசாலி நமக்கு போட்டியா இருக்குறது நல்லது தான்: நடிகை நமிதா கருத்து...!

Siva
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:32 IST)
விஜய் மாதிரி புத்திசாலி நமக்கு அரசியல் போட்டி ஆக இருப்பது நல்லது தான் என்று நடிகை நமீதா இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை நமிதா நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் அரசியல் எண்ட்ரி குறித்த கேள்விக்கு விஜய் ரொம்ப புத்திசாலி, விஜய் மாதிரி ஒரு புத்திசாலி நமக்கு அரசியல் போட்டி ஆக இருப்பது ஆரோக்கியமானது, ரொம்ப நல்லது என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்பட எந்த கட்சி தலைவர்களும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று அந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை இதுவரை கேட்டதே இல்லை என்றும் ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமே அனைத்து தொகுதிகளுக்கும் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்தார் என்றும் தெரிவித்தார்.

நீலகிரி தொகுதியில் கண்டிப்பாக பாரதிய ஜனதா தான் வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்தது பாரதிய ஜனதா கட்சியை தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அதற்காகவே எங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும் நவரா தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

அடுத்த கட்டுரையில்
Show comments