Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமச்சிவாயத்தை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ்! – பாஜகவில் இணைய வாய்ப்பா?

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (12:33 IST)
புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த நமச்சிவாயம் கட்சியினருடன் ஏற்பட்ட அதிருப்தியால் தலைவர் பதவியிலிருந்து விலகி இருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தொடர்ந்து வரும் அவர் சமீப காலமாக தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைய உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை நமச்சிவாயமே நேரடியாக புதுவை முதல்வர் நாராயணசாமியிடம் கொடுக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியே அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ததாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments