Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியுடன் ரஜினி... நல்லி குப்புசாமி சந்திப்பு பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:32 IST)
பன்னாட்டு பாரதி திருவிழாவில் ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் அழைப்பு விடுத்துள்ளார். 
 
ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகிவிட்ட நிலையில் இப்போது அவரின் போயஸ் கார்டன் இல்லம் பரபரப்பாகி உள்ளது. அவரை பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், தொழிலதிபர்களும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் ரஜினிகாந்தை பிரபல தொழிலதிபரும் நல்லி சில்க்ஸ் உரிமையாளருமான நல்லி குப்புசாமி செட்டியார் சந்தித்து பேசியுள்ளார். 
 
ஆம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பன்னாட்டு பாரதி திருவிழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பன்னாட்டு பாரதி திருவிழாவில் ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் அழைப்பு விடுத்துள்ளார். இந்த திருவிழா யூடியூப் மூலம் இணையவழியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments