Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தண்டனை கைதிகள் நளினி-முருகன் சந்திப்பு

Webdunia
சனி, 12 டிசம்பர் 2015 (20:01 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் அவருடைய மனைவி நளினி இருவரும் காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறையில் சந்தித்துப் பேசினர்.


 


மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தம்பதிகளான முருகன், நளினி இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி 15 நாள்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர். அதன்படி, வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகன் போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு இன்று அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில், பெண்கள் சிறையில் நளினியை முருகன் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது பின்னர் மீண்டும் ஆண்கள் சிறையின் முருகன் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments