Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சிளங்குழந்தையை கொலை செய்த தாய்.. அழுதுகொண்டே இருந்ததால் எரிச்சல் என வாக்குமூலம்..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (14:40 IST)
குழந்தை அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்த தாய் தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் - சினேகா தம்பதியினருக்கு 25 நாட்களுக்கு முன்னால் ஆண் குழந்தை பிறந்த நிலையில் இந்த குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்ததாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு குழந்தை திரும்பத் திரும்ப அழுது கொண்டே இருந்ததால் அந்த குழந்தையை சினேகா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக தெரிகிறது.  
 
ஆனால் போலீசார் விசாரணையின் போது தான் குளிக்க சென்றதாகவும் அப்போது குழந்தை தவறி தண்ணீரில் விழுந்து விட்டதாகவும் கூறினார். இதனை அடுத்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் சினேகாவிடம் மேலும் விசாரணை செய்த போது குழந்தையை அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்து கொன்று விட்டதாக வாக்குமூலம் கூறியுள்ளார் 
 
25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயை கொலை செய்திருப்பது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments