Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணுக்கு தையல் போட்ட பிணவறை ஊழியர் : அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (16:19 IST)
விபத்தில் அடிபட்டு மூக்குடைந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாத போது, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிகிச்சை அளிப்பது தொடர் கதையாகி வருகிறது.
 
கொடைக்கானல் அருகே கடந்த 29ம் தேதி சிலரை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் விபத்தில் சிக்கியது. அதில், 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்ந்தனர். எனவே, அவர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
 
ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர் மறுத்ததோடு, மதுரைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், வலியால் துடித்தவர்களுக்கு பிணவறை ஊழியர் முதலுதவி செய்துள்ளார். அதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
 
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சிகிச்சை அளிக்காத அந்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால், அவர் பிணவறை ஊழியர் அல்ல. அவர் பல்நோக்கு உதவியாளர் என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments