Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 5 மே 2024 (13:06 IST)
சென்னை மீனம்பாக்கத்தில் இன்றைய 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாளாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளதை அடுத்து கூடுதலாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் நேற்று கூட 19 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவானதாக தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று சென்னை மீனம்பாக்கத்தில் 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு என தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வேலூரில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே சென்னை மக்கள் வெயிலின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருக்கும் நிலையில் இன்று 105.8°F அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என்று கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments