Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களிடம் என்னவொரு தீவிரம்: இந்திய கிரிக்கெட் வீரர் ஆதரவு

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (14:32 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் ஆதரவு தெரிவித்துள்ளார்.


 

 
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சென்னை மெரீனா மற்றும் சேலம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வளர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
 
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய முழுவதும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தமிழகத்தில் நடைப்பெறும் போராட்டம் குறித்து செய்திகள் வெளியிடாத காரணத்தினால், தமிழகமும் இந்தியாவில் தான் உள்ளது, என்று கூறினார்.
 
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் தமிழர்களை கண்டு வியக்கிறேன் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பகுதியில் கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments