Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி வருகை எதிரொலி: உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்ற விவேகானந்தர் பாறை..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (17:09 IST)
பிரதமர் மோடி வருகை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்றதாகவும் சுற்றுலா பயணிகள் அதிகம் அங்கு குவிந்து வருவதாகவும் தகவல் வெளியானது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்ற பின்னர் தான் அங்கு ஏராளமான சுற்றுப்பயணிகள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவு செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் லட்சத்தீவு செல்ல ஆரம்பித்ததால் மாலத்தீவின் சுற்றுலா வருமானம் தலைகீழாக குறைந்தது. 
 
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தந்து அங்கு உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாள் தியானம் செய்த செய்தி, சர்வதேச மீடியாக்களில் தலைப்பு செய்தியாக மாறியது. இதன் காரணமாக தற்போது கன்னியாகுமரி உலகின் சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்றுள்ளதாகவும் தற்போது அதிக அளவு வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
மூன்றே நாள் தியானம் செய்து கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையை உலக சுற்றுலா தளமாக பிரதமர் மோடி மாற்றி உள்ளார் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

அடுத்த கட்டுரையில்
Show comments