Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஒரு ஊழல் "ஒழிப்பு" சாதனை வரலாற்றை வைத்திருக்கும் மோடி அவர்கள்- அமைச்சர் மனோதங்கராஜ்

Sinoj
செவ்வாய், 5 மார்ச் 2024 (16:52 IST)
சென்னை, வெள்ள பாதிப்பின்போது திமுக அர்சு மக்களுக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு,  திமுக அமைச்சர்காள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஒன்றிய அரசு நிதி தராத போதும் மாநில அரசு மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ததை கூட மோடி அறியவில்லையா? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்  கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், திமுக குடும்பக் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். சென்னையில் வெள்ள நீர் மேலாண்மையை திமுக அரசு சரிவர செயல்படுத்தவில்லை; வெள்ளத்தால் பாதிக்கப்பட மக்களுக்கு திமுக அரசு எத உதவியும் செய்யவில்லை . வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக திமுக தெரிவித்துக் கொண்டிருந்தது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
 
இதற்கு திமுக அமைச்சர்காள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஒன்றிய அரசு நிதி தராத போதும் மாநில அரசு மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ததை கூட மோடி அறியவில்லையா? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
 
''2015ல் சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது, விமானத்தில் இருந்து பார்வையிடுவது போன்ற போட்டோஷாப் செய்த படத்தை தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து, கடும் கண்டனங்களுக்கு பிறகு நீக்கிய மோடி அவர்கள், வெள்ளத்தின் போது 24 மணி நேரமும் உழைத்த திமுகவை பார்த்து ஊடக பிரச்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்தியதாக குற்றம் சாட்டுகிறார்.
 
2014ல் தேர்தலுக்கு முன்பு "சுவிஸ் வங்கியிலிருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவந்து மக்களின் வங்கி கணக்குகளில் போடுவேன்" என்று சொன்ன மோடி அவர்களின் ஆட்சியில் பெரும் பணக்காரர்கள் வங்கியில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி, எந்த சிரமமும் இன்றி நாட்டைவிட்டு தப்பி செல்ல உதவியதே அவரது சாதனை. Panama Papers, Pandora Papers போன்றவற்றில் நம் நாட்டு பிரபலங்கள் சட்டத்துக்கு புறம்பாக, அயல் நாடுகளில் சொத்து சேர்த்துள்ளதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. லோக்பால் சட்டத்தால் உருவான அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இன்று வரை ஒரு வழக்கில் கூட குற்றத்தை நிருபிக்கவில்லை. மோடி அவர்களாலேயே ஊழல் வாதிகள் என குற்றம் சாட்டபட்டவர்கள் BJP ல் சேர்ந்ததும் அஸ்ஸாமிலும், மகாராஷ்டிராவிலும் அவராலேயே முதல்வராக்கப்பட்டனர்.
 
இப்படி ஒரு ஊழல் "ஒழிப்பு" சாதனை வரலாற்றை வைத்திருக்கும் மோடி அவர்கள் திமுகவை நோக்கி "ஊழல்வாதிகள்" என்று கூறவதை பார்த்து சிரிக்கத்தான் வேண்டும்.
 
ஒன்றிய அரசு நிதி தராத போதும் மாநில அரசு மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ததை கூட மோடி அறியவில்லையா? ''என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments