Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவிழந்தது நாடா புயல்: மிதமான மழைக்கே வாய்ப்பு!!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (12:16 IST)
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே நேற்று குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக ‘‘நாடா’’ உருவானது. அது தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியது. 


 
 
இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 
 
இந்நிலையில் இன்று காலை ‘நாடா’ புயலின் நகர்விலும், வேகத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்த புயல் வலு இழந்து விட்டதாக சென்னை வானிலை கூறியுள்ளது. 
 
அடுத்த 12 மணி நேரத்தில் நாடா புயல் வலு இழந்து விடும். இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வருகிறது. நாடா புயல் வலு இழந்தாலும் அது நாளை (வெள்ளி) அதிகாலை கடலூர்-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் மழை மிதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள அரசின் புதிய அணை ப்ளானுக்கு தடை! பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

ரூ.100 எடுக்க போனால் ரூ.500 கொடுக்கும் ஏடிஎம்... குவிந்த மக்களால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம்..!

முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை.. கேரளாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முன்பதிவு பண்ணத் தேவையில்ல.. இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்!

பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: செல்வப்பெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments