Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது: மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (15:40 IST)
புதுக்கோட்டை சம்பவத்தை குறிப்பிட்டு பெண்கள்-  குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது என மு.க.ஸ்டாலின் ட்வீட். 
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காணாமல் போன சிறுமியை போலீஸார் தேடி வந்த நிலையில், காயங்களுடன் கண்மாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
நேற்று முந்தினம் காணாமல் போல சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டு உடல் உடற்கூராய்வு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால் பலாத்காரம் செய்யப்பட்டாளா என சந்தேகம் எழுந்துள்ளது.  
 
சிறுமிக்கு என்ன நேர்ந்தது, யார் இப்படி செய்தது என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வரும் போலீஸார் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.
 
மீண்டும் ஒரு சிறுமி! அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது. பெண்கள்-  குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது. இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

அடுத்த கட்டுரையில்