Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 தொகுதிகளும் நமதே.. திமுக நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (18:56 IST)
கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்றும் இந்த முறை அந்த ஒரு தொகுதியை கூட விடாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை ஏற்ற முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசிய போது ’கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்து விட்டோம் .ஆனால் இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் 
 
நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். ஆனால் அதே நேரத்தில் பூத் கமிட்டிகள் அமைப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்து கொள்கிறேன் அரசின் திட்டங்களை சரியாக மக்களிடம் சென்றடைகிறதா என்பதை மட்டும் தொண்டர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments