Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமையில் வாடிய தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு ரூ.5.லட்சம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (09:30 IST)
எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் உதவி செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 
தியாகராஜர் பாகவதரின் பேரன் சாய்ராம் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்திருந்தார். அவர் முதல்வரை தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், எங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்ததும் உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
 
அதன்படி, எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments