Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுமா? – முதல்வர் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (13:02 IST)
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழல் உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பிற்கு முன் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ வல்லுனர்கள் இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என கூறியுள்ளார். எனவே மத்திய அரசின் குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிவிப்பை பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments