Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சந்தித்த ஒருசில நிமிடங்களில் மோடிக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (15:54 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னைக்கு வருகை தந்தபோது திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை மீண்டும் வாசல் வரை வந்து வழியனுப்பினார்



 
 
இந்த சந்திப்பை அடுத்து வரும் தேர்தலில் திமுகவும் பாஜகவும் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் மோடியை சந்தித்த ஒருசில மணி நேரங்களில் மோடியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் ஆர்ப்பாட்ட தேதியை ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். பண மதிப்பிழப்பு தினமான நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமாக அனுசரித்து அன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், தமிழகத்தில் மழை பாதித்த 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவது உறுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக-பாஜக கூட்டணிக்கு இந்த சந்திப்பு அச்சாரமா? அல்லது உண்மையிலேயே மரியாதை நிமித்த சந்திப்பு மட்டும்தானா? என்று பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments