Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசை வார்த்தை கூறி 8ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (15:42 IST)
8ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
மீஞ்சூர், அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விநாயகமூர்த்தி (27). இவர், காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
 
விநாயகமூர்த்தியின் வீட்டிற்கு எதிரே 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வசிந்து வந்துள்ளார். எதிரெதிர் வீடு என்பதால் இருவருக்கும் இடையே அறிமுகம் இருந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று, விநாயகமூர்த்தி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அதே பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனால், செய்வதறியாது திகைத்த மாணவி அழுதபடியே சென்று தனது தாயிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் தாயும், உறவினர்களும் விநாயகமூர்த்தியிடம் கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளார்.
 
பின்னர், இது குறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி வழக்கு பதிந்து விநாயகமூர்த்தியை கைது செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்